திமுக ஆட்சியை அகற்ற முருகர் அருள்புரிய வேண்டும் - நயினார் நாகேந்திரன்

வாழ்வெங்கும் நம்பிக்கை, ஆனந்தம் நிரம்பச் செய்ய முருகனை வேண்டிக் கொள்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியை அகற்ற முருகர் அருள்புரிய வேண்டும் - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

பக்தியும் பொறுமையும் துணையாக,அன்பும் அறமும் வழிகாட்ட, இந்த தைப்பூசத் திருநாளில் தாய் மடியில் தவழும் பிள்ளையென எங்களை காத்து சோதனைகளில் துணையாய் நின்று, வெற்றியின் வழி காட்டி,உன் அருளால் எங்கள் வாழ்வெங்கும் நம்பிக்கை, ஆனந்தம் நிரம்பச் செய்ய உன்னை மனம் உருகி வேண்டிக் கொள்கிறேன்.

நம் தமிழகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் விடியா திமுக ஆட்சியை அகற்ற அருள் புரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் நம் தமிழர்களின் வாழ்நாள் கோரிக்கையான தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆட்சியில் 2021-ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நேரத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிவேல்..! வீரவேல்..!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com