பஞ்சப்பள்ளி அருகேமதுபோதையில் லாரி டிரைவருக்கு கொடுவாள் வெட்டுநண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

பஞ்சப்பள்ளி அருகேமதுபோதையில் லாரி டிரைவருக்கு கொடுவாள் வெட்டுநண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

பாலக்கோடு:

பஞ்சப்பள்ளி அருகே மதுபோதையில் லாரி டிரைவரை கொடுவாளால் வெட்டிய நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நண்பர்கள்

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் குமார் (34). கூலித்தொழிலாளி. இருவரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் நேற்று மதியம் மணிகண்டன் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு மது குடிப்பதற்காக குமார் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கு 2 பேரும் மது குடித்தனர். இதையடுத்து போதை ஏறியதும் குமார், மணிகண்டனின் மனைவிக்கு போன் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனை மணிகண்டன் கண்டித்ததால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

வலைவீச்சு

இதனால் ஆத்திரமடைந்த குமார் கொடுவாளால் மணிகண்டனின் தலை, கை, கால் என பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து பலத்த காயம் அடைந்து அலறிய மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொடுவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com