சென்னையில் லாரி டிரைவர் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு

சென்னையில் லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் நெல்லை பேட்டையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் லாரி டிரைவர் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
Published on

பேட்டை:

நெல்லையை அடுத்த பழைய பேட்டை சர்தார்புரத்தை சேர்ந்தவர் பழனி (வயது 40). இவருடைய மனைவி சந்திரகலா (36). இவர்களுக்கு ஆண், பெண் என 2 குழந்தைகள் உள்ளனர். பழனி சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். 2 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். 2 நாட்களுக்கு முன்பாக சென்னை தாம்பரம் அருகே மெயின் ரோட்டில் உள்ள புளிய மரத்தில் பழனி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலையில் பழனி உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக பழைய பேட்டைக்கு கொண்டு வந்தனர். அப்போது பழனியின் உறவினர்கள், பழனி சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சாலையில் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பழனி இறந்தது தொடர்பாக சென்னை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அங்கு சென்று புகார் அளிக்கும்படி கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com