

மதுரை,
மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே வடபழஞ்சி கிராமம் வடக்குதெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). லாரி டிரைவரான இவர், கடந்த 26-ம் தேதி இரவு பைக்கில் சென்றபோது காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார்.
இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி சிவக்குமாரின் உடல் உறுப்புகளில் கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மகாத்மாகாந்தி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவமனைக்கும், கருவிழிகள், தோல் திசு ஆகியவை மதுரை அரசு மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.