திண்டிவனம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கி.மீ.க்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டிவனம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
Published on

சென்னை,

திண்டிவனம் அருகே சலவதி பகுதியில் அரசு பஸ் வந்தபோது, திருவண்ணாமலையில் இருந்து புதுவை நோக்கிச் சென்ற லாரி, பஸ் வருவதை கவனிக்காமல் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளது.

அப்போது லாரி மோதியதில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சில் பயணித்த 40 பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பஸ்சில் சிக்கிய பயணிகளை மீட்டு, திண்டிவனம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் அரசு பஸ்சின் ஓட்டுநர் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கி.மீ.க்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி, போக்குவரத்தை சீர்செய்தனர்.

மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com