எட்டிமரத்துப்பட்டியில்மண் கடத்திய லாரி பறிமுதல்

எட்டிமரத்துப்பட்டியில்மண் கடத்திய லாரி பறிமுதல்
Published on

நல்லம்பள்ளி

தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் போலீசார் எட்டிமரத்துப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில் நுரம்பு மண் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முத்துகவுண்டன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முத்து (வயது26) மற்றும் எட்டிமரத்துபட்டியைச் சேர்ந்த கிளீனர் சந்தோஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர், கிளீனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com