லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதபமாக இறந்தார்.
லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
Published on

கணபதி

கோவை கணபதி மாமரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் மாநாகராட்சி மேற்கு மண்டல உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மகன் சஞ்சித்விஷ்ணு (வயது18).

இவர் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் கணபதி சத்திரோடு அண்ணாநகரில் தனியார் மருத்துவமனை அருகில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்குலாரி மோதியதில் படுகாயம் அடைந்த சஞ்சித் விஷ்ணுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் அவர் பரிதபமாக இறந்தார். இது குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com