திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்த லாரி

திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்த லாரி
Published on

தூத்துக்குடியில் இருந்து திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்துக்கு காகித பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தூத்துக்குடியை சேர்ந்த செல்வம் ஓட்டினார்.

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், தோமையார்புரம் பகுதியில் நேற்று காலை லாரி வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில், லாரியில் கொண்டுவரப்பட்ட காகிதங்கள் சாலையோர பள்ளத்தில் விழுந்தன.

இந்த விபத்தில் டிரைவர் செல்வம் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com