500 அடிபள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக தப்பிய 2 பேர்

லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது
சென்னை,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில், கிரானைட் கற்களை ஏற்றி சென்ற லாரி ஒன்று, 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த பயங்கர விபத்தில், லாரியின் ஓட்டுனரான சலீமும், கிளீனரான இம்ரானும் நல்வாய்ப்பாக காயங்களுடன் உயிர் தப்பினர்.
கர்நாடக மாநில எல்லை பகுதியான கர்கேகண்டி (Karkekandi), வேலம்பட்டி வியூ பாயிண்ட் பகுதியில் லோடுடன் வந்த போது, லாரியின் Center XL முறிந்து லாரியானது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






