

கோவை,
எரிபொருட்களின் விலை உயரும்போது சரக்கு போக்குவரத்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து, அடித்தட்டு மக்களை பாதிக்கிறது. அத்துடன் தொழில் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
தற்போது டீசல் விலை உயர்வால் லாரி வாடகையை வருகிற 15-ந் தேதி முதல் 25 சதவீதம் உயர்த்த தமிழக லாரி உரி மையாளர்கள் சம்மேளனத்தினர் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே பெட்ரோல், கியாஸ் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. தற்போது இது மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தொழில் நகரமான கோவையில் லாரி வாடகை உயர்வால் தொழில்துறை வளர்ச்சியும் முடங்க வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து வரும் தொழில்துறையினரைலாரி வாடகை உயர்வு பெரிதும் பாதிக்கும். குறிப்பாக பிறமாநிலங்களுக்கு சரக்குகளை கொண்டு செல்ல கூடுதல் செலவாகும். எனவே இந்த பிரச்சினைக்கு அரசு தீர்வு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுதொடர்பாக கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான லாரி கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த லாரிகள் மூலம் தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளம், கர்நா டகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் வேளாண் விளைபொருட்கள், தொழில் துறை சம்பந்தமான எந்திரங்கள், உதிரிபாகங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்படுகின்றன. இதேபோன்று வெளியிடங்களில் இருந்தும் சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன.
தற்போது பராமரிப்பு, ஆண்டுதோறும் உயரும் சுங்கக்கட்ட ணம், காப்பீடு, உதிரி பாகங்கள் விலை உயர்வு போன்றவற் றால் லாரி உரிமையாளர்கள் நெருக்கடியை சந்தித்து வருகிறோம். லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால் எங்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே வேறு வழியின்றி லாரி வாடகையை 25 சதவீதம் உயர்த்தி உள்ளோம். தினசரி பார் சல் சர்வீஸ் கட்டணமும் 25 சதவீதம் வரை அதிகரிக்கப்படும். எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.