லாட்டரி சீட்டுகள் விற்ற 7 பேர் பிடிபட்டனர்

லாட்டரி சீட்டுகள் விற்ற 7 பேர் பிடிபட்டனர்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் லாட்டரி சீட்டுகள் விற்ற மேல்கரடிகுறி சுரேஷ் (வயது 27), கரீம் சாய்பு தெரு சாதிக் பாஷா (55), சின்ன பர்கூர் லட்சுமணன் (58) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com