லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
லாட்டரி விற்றவர் கைது
Published on

ஊட்டி, 

ஊட்டி ஊரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் முத்தோரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முத்தோரை பாலாடா பஜார் பகுதியில் சந்தேகப்படும் படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து அவரை சோதனை செய்ததில், கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் நஞ்சநாடு கக்கஞ்சி காலனியை சேர்ந்த முருகன் (வயது 45) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com