கேரள லாட்டரியில் அதிர்ஷ்டம்: விற்றவருக்கே ரூ.12 கோடி பரிசு

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்ததால் லாட்டரி சீட்டு விற்று வந்துள்ளார் தொழிலாளி பொன்னன்.
கேரள லாட்டரியில் அதிர்ஷ்டம்: விற்றவருக்கே ரூ.12 கோடி பரிசு
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தின் 'விஷு பம்பர்' லாட்டரி சீட்டு குலுக்கல் நடந்தது. இதில் லாட்டரி டிக்கெட் விற்று பிழைப்பு நடத்தி வந்த பொன்னன் என்ற தொழிலாளிக்கு ரூ.12 கோடி முதல் பரிசு விழுந்து உள்ளது. இந்த ஜாக்பாட் பரிசு குறித்து பொன்னன் மகிழ்ச்சியுடன் கூறியதாவது:-

கடந்த பல வருடங்களாக நான் சாலையோரம் நின்று லாட்டரி சீட்டுகளை விற்று வருகிறேன். சில நேரங்களில் எனக்காகவும் ஒரு சில டிக்கெட்டுகளை வாங்குவது வழக்கம். இந்த முறை விற்பனைக்காக வாங்கி வந்த டிக்கெட்டுகளில், எனக்கு பிடித்த '2' என்ற எண்ணில் முடிந்த ஒரு டிக்கெட்டை எனக்காக வைத்துக் கொண்டேன்.

அதுவே எனக்கு அதிர்ஷ்டத்தை தந்துள்ளது. வறுமையில் வாடும் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைவது மிகவும் கடினம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தற்போது எங்களிடம் கோடிக்கணக்கில் பணம் உள் ளது. எனவே, எனது மகன் வினோத்திற்கு நல்லதொரு குடும்பத்தில் இருந்து பெண் பார்த்து, தடபுடலாக திருமணம் செய்து வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரம் இழந்ததால், பொன்னன், அவரது மனைவி மற் றும் மகன் ஆகிய மூவரும் சேர்ந்து லாட்டரி சீட்டு விற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com