லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மயிலாடுதுறை அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் அச்சுதராயபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலையடுத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தனது வீட்டின் வாசலில் வைத்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த லெட்சுமிநாராயணன் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த வெளிமாநில ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் லெட்சுமி நாராயணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com