லாட்டரி சீட்டு விற்றவர் கைது

களியக்காவிளையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

களியக்காவிளை:

களியக்காவிளையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஐங்காமம் பகுதியை சேர்ந்த சத்யன் (43) என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com