லாட்டரி சீட்டு விற்றவர் கைது

பாவூர்சத்திரம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கே.டி.சி.நகர் அருகே மூன்று சக்கர வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கீழப்பாவூர் எஸ்.கே.தெருவை சேர்ந்த மாரிப்பாண்டி (வயது 40) என்பதும், இவர் விற்பனைக்காக தென்காசியில் இருந்து கேரள மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி வைத்திருந்தததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com