

திட்டச்சேரி:-
மயிலாடுதுறை ரெயிலடி தட்டாரத்தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). இவர் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு சென்று மூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.250-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.