லாட்டரி சீட்டு விற்றவர் கைது

நெல்லை அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோபாலசமுத்திரம் பஜார் அருகே சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டு இருந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த பிச்சைகண்ணு (வயது 65) என்பதும், அவர் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com