லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
Published on

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் காகிதப்பட்டறை உழவர் சந்தை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டான்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில் அவர் சத்துவாச்சாரி பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பதும், லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com