லாட்டரி சீட்டு விற்றவர் கைது

சிவகிரியில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் சிவகிரியில் மெயின் பஜார், பஸ்நிலையம், தேரடி முனீஸ்வரர் ஆலயம் சந்திப்பு போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முதியவர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் இல்லம்பிள்ளை தெற்குத்தெருவைச் சேர்ந்த கணேசன் (வயது 64) என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 36 லாட்டரி சீட்டுகளையும், 1,020 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com