லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிக்கினார்

கூடலூர் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிக்கினார்
Published on

கூடலூர் அருகே லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் புது ரோடு, அம்பேத்கர் காலனி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லோயர்கேம்ப் பஸ் நிறுத்தம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், தேனி ஊஞ்சாம்பட்டியை சேர்ந்த குருசாமி (வயது 76) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1,640 மதிப்புள்ள 41 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com