லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிறையில் அடைப்பு

லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிறையில் அடைப்பு
Published on

ஆலங்குடியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ஆலங்குடி கே.வி.எஸ். தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன், ரூ.9 ஆயிரத்து 50 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் ஆனந்தகுமாரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com