எல்லை தாண்டி மலர்ந்த காதல்... சென்னை பெண்ணை கரம்பிடித்த பிரான்ஸ் மாப்பிள்ளை

காதல் ஜோடிக்கு சென்னையில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
எல்லை தாண்டி மலர்ந்த காதல்... சென்னை பெண்ணை கரம்பிடித்த பிரான்ஸ் மாப்பிள்ளை
Published on

சென்னை,

சென்னையை சேர்ந்த பல் மருத்துவரான லாவன்யா, மேற்படிப்பிற்காக ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு பொறியாளர் இட்டியன் கின்டஸ்லர் என்பவரை சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும் பேசி நட்பாக பழகிய நிலையில், நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது.

பின்னர் தங்கள் காதல் குறித்து இருவீட்டாரிடமும் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர். இதையடுத்து இந்த காதல் ஜோடிக்கு சென்னையில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த மணமகனின் உறவினர்கள், தமிழ் முறைப்படி வேட்டி, புடவை அணிந்து வந்திருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com