காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

வடுவூர் அருகே திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

வடுவூர்:

வடுவூர் அருகே திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

காதல்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள பருத்திக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் திரிசங்கு. இவருடைய மகன் பாரதிராஜா (வயது 25). என்ஜினீயர். இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நிஷா (வயது 17). இவர் நாகையில் உள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங் படித்து வந்தார். உறவினர்களான பாரதிராஜாவும், நிஷாவும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதலுக்கு நிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நிஷா வேதாரண்யத்தில் இருந்து நேற்று முன்தினம் பாரதிராஜாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.பாரதிராஜாவின் பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் பாரதிராஜாவும், நிஷாவும் பருத்திக்கோட்டை சடையக்குளம் அருகே உள்ள மரத்தில் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பாரதிராஜாவும், நிஷாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வடுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்னை அபிராமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடுவூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com