நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
Published on

கந்தம்பாளையம்

கந்தம்பாளையம் அருகே உள்ள பெருங்குறிச்சி கொசவம்பாளையத்தை சேர்ந்த நடராஜ் மகன் ஸ்ரீதர் (வயது27). இவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். சேலம் ஜங்ஷனை சேர்ந்த சிவக்குமார் மகள் மகாலட்சுமி (20). இவர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்கள் காதல் திருமணத்திற்கு மகாலட்சுமி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்செங்கோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இருவீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மகாலட்சுமியை, ஸ்ரீதர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com