காதல் ஜோடி தஞ்சம்

நெமிலி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
காதல் ஜோடி தஞ்சம்
Published on

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த மானாமதுரை கிராமத்தில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரின் மகன் அரிகிருஷ்ணன் (வயது 28). எம்.காம். படித்துவிட்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரும் காஞ்சீபுரம் மாவட்டம், வேளியூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மகள் சாந்தியும் (23) கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் நேற்று நெமிலி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com