ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பட்டதாரி இளம்பெண் காதலனுடன் தஞ்சம்

ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பட்டதாரி இளம்பெண் காதலனுடன் தஞ்சம்
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் அரவிந்தன் (வயது 23). பி.ஏ. பட்டதாரி. பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் படித்தபோது அரவிந்தனும், அதே கல்லூரியில் படித்த அரூர் வர்ணதீர்த்தம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் அனிதா (23) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தற்போது அனிதா எம்.எஸ்சி. முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இருவரது காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று அனிதா வீட்டை விட்டு வெளியேறி ஏ.பள்ளிப்பட்டி மாரியம்மன் கோவிலில் அரவிந்தனுடன் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து ஏ.பள்ளிபட்டி போலீஸ் நிலையத்தில் இருவரும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com