காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
Published on

சமயபுரம்:

சமயபுரம் அருகே உள்ள வைப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் பிரசன்னன் (வயது 24). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, இவருக்கும், அதே கல்லூரியில் படித்த திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்த முருகனின் மகள் ஜோதிகா (வயது23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் அது காதலாக மாறியது. இந்நிலையில் அவர்கள் 2 பேரும் இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

அவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்களோ? என்று அஞ்சிய அவர்கள், பாதுகாப்பு கேட்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இருதரப்பு பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அந்த பெண் காதல் கணவருடன் செல்வதாக கூறியதையடுத்து, அவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com