சாலையோரத்தில் பேசிக்கொண்டிருந்த காதலர்கள்.. நோட்டமிட்ட 3 வாலிபர்கள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்


சாலையோரத்தில் பேசிக்கொண்டிருந்த காதலர்கள்.. நோட்டமிட்ட 3 வாலிபர்கள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
x

காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதுடன், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கிச் சென்றது.

ராணிப்பேட்டை


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் வாலாஜாவை அடுத்த தெங்கால் பாலாறு மேம்பாலம் வழியாக நேற்று முன்தினம் இரவு தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுக்கொண்டு இருந்தார்.

வழியில் ராணிப்பேட்டையை அடுத்த நவ்லாக் அருகே காதலர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். இதனை அந்த வழியாக வந்த 3 வாலிபர்கள் நோட்டமிட்டனர். தொடர்ந்து காதலர்களை மடக்கி வாக்குவாதம் செய்தனர். திடீரென அவர்கள் இளம்பெண் அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை பறித்தனர்.

மேலும், இளம்பெண்ணின் காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. பின்னர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கிச் சென்று 3 வாலிபர்களும், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணும், காதலனும் நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து இளம்பெண் மற்றும் அவர்களது உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில்,போலீசார் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்களையும் வலைவீசி தேடி வந்தனர். நேற்று, சிப்காட் அருகே அவரக்கரை பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள்தான் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story