கடல் நீர்மட்டம் தாழ்வு: விவேகானந்தர் மண்டபத்துக்கு 2 மணி நேரம் படகு சேவை நிறுத்தம்

கடல்நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது.
கடல் நீர்மட்டம் தாழ்வு: விவேகானந்தர் மண்டபத்துக்கு 2 மணி நேரம் படகு சேவை நிறுத்தம்
Published on

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம்.

இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது. அதன்படி வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக தொடங்கப்படவில்லை. பின்னர் 10 மணி அளவில் கடல்நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்துவிட்டு திரும்பினர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com