விடுதலைப்புலிகள் தலைவர் "பிரபாகரன் என்றாவது ஒரு நாள் வருவார்" வைகோ நம்பிக்கை

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 69-வது பிறந்த நாள் விழா சென்னை பாந்தியன் சாலையில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது.
விடுதலைப்புலிகள் தலைவர் "பிரபாகரன் என்றாவது ஒரு நாள் வருவார்" வைகோ நம்பிக்கை
Published on

சென்னை,

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 69-வது பிறந்த நாள் விழா சென்னை பாந்தியன் சாலையில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டினார்.

பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரபாகரன் என்றாவது ஒரு நாள் வருவார் என்ற நம்பிக்கையோடு அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். நாளை (அதாவது இன்று) மாவீரர் தினம். விடுதலை போரில் தங்கள் இன்னுயிரை இழந்த விடுதலை புலிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற நாள். மாவீரர் தினம் ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நாளை (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. கவிஞர் காசியானந்தன், பழ.நெடுமாறன் ஆகியோர் விடுதலை புலிகளுக்காகவே வாழ்ந்தவர்கள். அதனால் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் அது மர்மமாகவே உள்ளது.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு வைகோ கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com