சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 8-ந்தேதி நடை அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 8-ந்தேதி நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 8-ந்தேதி நடை அடைப்பு
Published on

மதுரை,

சந்திர கிரகணம் வருகிற 8-ந்தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைக்கிறது. இந்த நிலையில், சந்திர கிரகணத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கேவிலில் வரும் 8-ந்தேதி நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சந்திரகிரகணம் வருகிற 8-ந் தேதி மதியம் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணி வரை நடக்கிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 9.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டு இருக்கும்.

மேலும் அன்றைய தினம் அன்னாபிஷேகம் காலை 7 மணிக்கு நடைபெறும். இரவு 7.30 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த 22 உபகோவில்களில் இதே நேரத்தில் நடை அடைக்கப்படும்.

இதற்கிடையில் வருகிற 7-ந் தேதி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com