முதியவர்களுக்கு மதிய உணவு

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் த.மு.மு.க. சார்பில் முதியவர்களுக்கு மதிய‌ உணவு வழங்கப்பட்டது.
முதியவர்களுக்கு மதிய உணவு
Published on

த.மு.மு.க.வின் 29-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மருத்துவ முகாம் ரத்த தான முகாம் நடந்தது. பெருமாள்புரத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு (சிக்கன் பிரியாணி, முட்டை, இனிப்பு) வழங்கப்பட்டது. மேலப்பாளையம் பகுதி தலைவர் யூசுப் சுல்தான் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் மதிய உணவை வழங்கி தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட பொருளாளர் மைதீன் ம.ம.க.இளைஞர் அணி மாநில பொருளாளர் ரியாஸ், மாவட்ட துணைச் செயலாளர் காஜா, இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநில துணை செயலாளர் காசிம் பிர்தவுஸி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com