கன்னியாகுமரியிலிருந்து வட்டக் கோட்டைக்கு மீண்டும் சொகுசு படகு சேவை தொடக்கம்

75 பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த குளிரூட்டப்பட்ட படகு, ஒரு மணி நேர கடல் பயணத்தை வழங்குகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரையோரம் அமைந்திருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி வட்டக் கோட்டை. நான்குபுறமும் உள்கோட்டை, தூண்களுடன் கூடிய மண்டபம் என வட்ட வடிவில் அமைந்திருப்பதால் வட்டக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க வட்டக் கோட்டையை சுற்றுலா பயணிகள் பலரும் கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரியிலிருந்து வட்டக் கோட்டைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சொகுசு படகு சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து வட்டக் கோட்டைக்கு 4 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவு ஆகும். 75 பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த குளிரூட்டப்பட்ட படகு, ஒரு மணி நேர கடல் பயணத்தை வழங்குகிறது.

ஒரு நபருக்கு ரூ.450 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு படகு சேவையின் மூலம் கடல் அழகையும், பழமையான கோட்டையையும் கண்டு களிக்கலாம். சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு அற்புதமான அனுபவமாக அமையும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com