

சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அதைப்பற்றி கவலை கொள்ளாமல், மனம் தளராமல் மீண்டும் தேர்வுகளை எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும்.
ஒரு தேர்வில் வெற்றி பெறவில்லை என்பதற்காக வாழ்க்கையில் அனைத்து வாய்ப்புகளையும் இழந்து விட்டதாக கருதக்கூடாது.
தேர்வில் வெற்றி பெற முடியாத பலரும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற்று, உலகில் மாபெரும் சாதனைகளை புரிந்துள்ளனர். விஞ்ஞானிகளாகவும், பல்துறை விற்பனர்களாகவும் திகழ்ந்துள்ளனர் என்பதை கவனத்தில் கொண்டு மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து அடுத்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விழைகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.