நாமக்கல்லுக்குவாக்குப்பதிவுக்கு தேவையான 1,000 விவிபேடு எந்திரங்கள் வந்தன

நாமக்கல்லுக்குவாக்குப்பதிவுக்கு தேவையான 1,000 விவிபேடு எந்திரங்கள் வந்தன
Published on

நாமக்கல்:

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெங்களூருவில் இருந்து எம்-3 வகையிலான வாக்காளர் விவரம் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் (விவிபேடு) 1,000 எண்ணிக்கையில் நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி உள்ளது.

இந்த எந்திரங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு எந்திர கிடங்கில் கலெக்டர் உமா தலைமையில் திறக்கப்பட்டு, அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, உரிய பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்ரமணியன், தாசில்தார் (தேர்தல்கள்) திருமுருகன் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com