

விழுப்புரம்,
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தில் இருந்து மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட் பட்ட பகுதிகளுக்கு 85 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதில் மதுராந்தகத்தில் இருந்து திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்கு 3 நிர் ணயிக்கப்பட்ட நடைகளும், மதுராந்தகத்தில் இருந்து மரக்காணம் வழியாக புதுச்சேரிக்கு 5 நடைகளும், மதுராந்தகத்தில் இருந்து தாம்பரத்திற்க்கு 22 நடைகளும், சூணாம்பேடுக்கு 13 நடைகளும், பவஞ்சூருக்கு 7 நடைகளும், செய்யூருக்கு 13 நடைகளும், காஞ்சீபுரத்திற்க்கு 3 நடைகளும், திண்டிவனத் திற்க்கு 10 நடைகளும், மரக்காணத்திற்கு 4 நடைகளும், செங்கல்பட்டிற்கு 5 நடைகளும். என 85 பஸ் நடைகள் மற்றும் அடர்வு மிகுந்த பகுதிகளின் தேவைக்கேற்ப கூடுதல் நடைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக் கப்பட உள்ளது. இந்த தகவலை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.