அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவால் காலமானார்

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவால் காலமானார்
Published on

சென்னை

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார்.

எனினும் அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மதுசூதனன் இன்று பிற்பகல் 3.42 மணிக்கு காலமானார்.

கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராக பணியாற்றியவர் மதுசூதனன். கடந்த 2010ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவியில் இருந்தவர் மதுசூதனன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com