பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு

பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது.
பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

கடந்த சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 9 ஆயிரத்து 693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பின்னர், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்.

இதனையடுத்து அதேதொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு இன்று நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்த காரணங்களும் இல்லை எனக்கூறி, ஜெயக்குமாரின் மனுவை ஏற்று தோப்பு வெங்கடாசலத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார். அண்மையில் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து சமீபத்தில் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com