

சென்னை
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக செல்லத்துரை நியமனம் செய்யபட்டு உள்ளார். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 3 அல்லது 4 மாதங்களில் துணைவேந்தரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப 6 மாதத்திற்கு முன்பே பட்டியல் தயாரிக்கப்படும். துணைவேந்தர் பதவிக்கான கல்வித்தகுதி குறித்து ஆளுநருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என கூறினார்.