மதுரை: ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி

மதுரை திருப்பரங்குன்றத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் இளம்பெண்ணும், ஆணும் ரெயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.
ரெயிலில் அடிபட்டு பலி
Published on

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றத்தில் வெயிலுக்கு உகந்த அம்மன் கோவில் அருகே ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இளம்பெண்ணும், ஆணும் ரெயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

போலீசார் விசாரணை:

சென்னையில் இருந்து கொல்லம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் இவர்கள் அடிபட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. உடல்களைக் கைப்பற்றிய மதுரை ரெயில்வே போலீசார், அவற்றை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இவர்கள் யார், தற்கொலையா அல்லது விபத்தா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com