

மதுரை,
மதுரை மாவட்டம் கே.பரமன்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 38), மும்பையில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவர் ஊர் திருவிழாவிற்காக குடும்பத்துடன் வந்திருந்தார்.
நள்ளிரவில் வீட்டின் முன் தூங்கிக்கொண்டிருந்தபோது, மகன் அனீஸ்(10) மீது பாம்பு ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன், அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது வீட்டில் இருந்த மகள் அமிர்தா(9) வாந்தி எடுத்ததால், சந்தேகம் அடைந்து அவளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அமிர்தாவின் கால் விரலில் பாம்பு கடித்தது உறுதியானது. சிகிச்சை பலனின்றி சிறுமி அமிர்தா உயிரிழந்தாள். அதிர்ஷ்டவசமாக பெற்றோர் மற்றும் சகோதரன் உயிர் தப்பினர்.