சிறை கைதிகளுக்கு செல்போன் கஞ்சா விநியோகம்; 2 போலீசாரை டிஸ்மிஸ் செய்து அதிரடி நடவடிக்கை

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன் கஞ்சா வழங்கி உதவிய 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சிறை கைதிகளுக்கு செல்போன் கஞ்சா விநியோகம்; 2 போலீசாரை டிஸ்மிஸ் செய்து அதிரடி நடவடிக்கை
Published on

மதுரை,

மதுரை மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் குற்ற வழக்குகளில் தண்டணை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைவாசிகள் சிலருக்கு தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களை விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் சிறை வளாகம் முழுவதும் சிறைத்துறை போலீஸ் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதில் சிறைக்காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரும் 7 கைதிகளுக்கு, கஞ்சா மற்றும் செல்போன் வழங்கி உதவிவந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன், சிறைக்காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்தது சிறைத்துறை போலீஸ்.

அதன்பின், சிறைவாசிகளிடம் நடந்த விசாரணையில், கடந்த 5 மாதங்களாக சட்டவிரோதமாக அவர்களுக்கு போதை பொருட்கள் மற்றும் செல்போன் வழங்கி வந்ததும். செல்போனில் அடிக்கடி என 113 முறை பேச வைத்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த விசாரணைக்கு பின், ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட சிறைக்காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமாரை தற்போது பணிநீக்கம் செய்து சிறைத்துறை போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com