சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை கோர்ட்டு உத்தரவு

சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி மதுரை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை கோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.பிறகு, சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் 280 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். ஆன்லைன் மூலம் மதுரை சிறப்பு கோர்ட்டில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையே, சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்த வழக்கில், ஜாமீன் வழங்க கோரிய வழக்கு மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com