மதுரை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்


மதுரை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்
x

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மதுரை


மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பஸ் நிலையம், உலகனேரி, ஐகோர்ட்டு மதுரைக் கிளை, உத்தங்குடி, பாண்டி கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள காலியிடங்கள், சாலை ஓரங்கள், நீர்நிலைகள், திறந்த வெளி கால்வாய்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள் குப்பைகளை அகற்றாவிட்டால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story