

செக்கானூரணி,
மதுரை மாவட்டம் மேலபொன்னகரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்கள்க இருவரும் உசிலம்பட்டியில் உள்ள உறவினர் இறப்பிற்கு ஆறுதல் தெரிவித்து விட்டு மோட்டார் சைக்கிளில் இன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் செக்கானூரணி அருகே கருமாத்தூர் விகேசி மகால் எதிரில் சென்றபோது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த செக்கானூரணி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் சந்தனம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.