மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் கொல்லத்துடன் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டம் மற்றும் பெங்களூரு ரெயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 16327) வருகிற 11-ந் தேதி கொல்லம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16328) வருகிற 12-ந் தேதி கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு வழக்கமான நேரத்தில் மதுரை புறப்படும்.
அதேபோல, மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20671) வருகிற 12-ந் தேதி கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் செல்வதற்கு பதிலாக எஸ்.எம்.வி.பி. பெங்களூரு ரெயில் நிலையம் செல்லும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் அன்றைய தினம் எஸ்.எம்.வி.பி. பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம் வழியாக மதுரை வந்தடையும்.






