மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு


மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2025 3:45 AM IST (Updated: 4 Sept 2025 3:45 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டள்ளது.

சென்னை,

திருவனந்தபுரம் கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்.16327), வரும் 10,12 ஆகிய தேதிகளில் கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கொல்லத்தில் நிறுத்தப்படும்.

மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(16328), வரும் 11,13 ஆகிய தேதிகளில் குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக கொல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story