மதுரை ஐகோர்ட்டு வக்கீல் தீக்குளித்து தற்கொலை

மதுரை ஐகோர்ட்டு வக்கீல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை ஐகோர்ட்டு வக்கீல் தீக்குளித்து தற்கொலை
Published on

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், மதுரை ரோடு பகுதியில் வசிப்பவர் வீரபத்திரன். இவரது மகன் விக்னேஷ் ரகுராம் (வயது 29). மதுரை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்த இவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்தனர். ஆனால் அவர் திருமணம் பிடிக்கவில்லை என கூறியதாக தெரிகிறது. இந்தநிலையில் நத்தம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் அவரது உடல் கருகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தற்கொலைக்கு முன்பு, தனக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை. வாழவும் பிடிக்கவில்லை என கூறிவிட்டு தான் இருக்கும் இடத்தை (லொகேஷன்) செல்போன் மூலம் உறவினர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com