தமிழக இளைஞரை திருமணம் செய்த இலங்கைப் பெண் - நாடு கடத்த மதுரை ஐகோர்ட்டு கிளை தடை

பவித்ரா கர்ப்பமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு 60 நாட்களுக்கு அவரை நாடு கடத்த நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார்.
தமிழக இளைஞரை திருமணம் செய்த இலங்கைப் பெண் - நாடு கடத்த மதுரை ஐகோர்ட்டு கிளை தடை
Published on: 

மதுரை,

இலங்கையை சேர்ந்த பவித்ரா என்ற பெண், சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருந்த நிலையில், தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் பவித்ரா கர்ப்பமான நிலையில், விசா காலம் முடிந்த பிறகும் அவர் நாடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து பவித்ராவை நாடு கடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நாடு கடத்தும் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பவித்ரா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சி.சரவணன், தற்போது பவித்ரா கர்ப்பமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு 60 நாட்களுக்கு அவரை நாடு கடத்த தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், 60 நாட்களுக்குள் தகுந்த சட்டங்களின் கீழ் முறைப்படி திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்திய நீதிபதி, பவித்ராவுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com